மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள “Shang Chi and the Legend of the Ten Rings”(ஷாங்-சி மற்றும் லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்) எனும் ஆசிய சூப்பர் ஹீரோ படத்தின் வேற லெவல் அப்டேட் வெளியாகியுள்ளது.

மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் படங்கள் மற்றும் சீரிஸ்களுக்கு உலக ரசிகர்களிடையே வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மார்வெல் சினிமாட்டிக் யூனிட்டின் 25வது படமாக, Shang Chi என்கிற பெயரில் பிரம்மாண்ட ஆசிய சூப்பர் ஹீரோ படம் உருவாக்கியுள்ளது.
குங்பூ கலையை மையமாக வைத்து உருவாக்கப் பட்டுள்ள இந்த படம் மார்வெல் Phase 4-ல் இடம் பெற்றுள்ளது. ஆசிய சூப்பர் ஹீரோவை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதால் இந்த படத்தை இந்திய ரசிகர்கள் பலரும் காண்பதற்கு ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி “Shang Chi and the Legend of the Ten Rings” படம் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கித்தில், கெவின் ஃபீகே மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் தயாரிப்பில் முதன்மை கதாபாத்திரமான ஷாங்-சி கேரக்டரில் சிமு லியு நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் சிமு லியு-வுடன் இணைந்து ஆக்வாஃபினா, மெங்கர் ஜாங், ஃபலா சென், ஃப்ளோரியன் முன்டீனு, பெனடிக்ட் வாங், யுவன் வா, ரோனி சியெங், சாக் செர்ரி, டல்லாஸ் லியு, மிக் யோ, மற்றும் டோனி லியுங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.