கல்யாணம் முடிஞ்சதும் தங்கச்சியோடு அரபிக்குத்து ரீல்ஸ்… பாடகி ஸ்வகதா பகிர்ந்த வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகி ஸ்வகதா  சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில் தனது தங்கை மாயாவோடு இணைந்து அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ளார்.

Advertising
>
Advertising

இது நல்லாருக்கு.. ஃபோட்டோவுடன் 'பேச்சிலர்' திவ்யபாரதி பகிர்ந்த செம்ம கேப்ஷன்!

காதலர்தினத்தில் அரபிக்குத்து

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், நடிகர் கிங்ஸ்லி, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் விரைவில் ரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் உருவான விதம் குறித்து சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் நெல்சன் இடம்பெற்ற ஜாலியான ப்ரோமோ வெளியாகி வைரலானதுடன், பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

150+ மில்லியன் வியூஸ்

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக வெளியான அரபிக்குத்து பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. அது மட்டுமில்லாமல் ரிலீஸ் ஆனது முதல் இப்போதுவரை இணையத்தில் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த பாடலைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனைக் கடந்துள்ளது. இப்போது பெரியத்திரையில் இந்த பாடல் வெளியாகியுள்ளதால் அந்த பாடலைக் காண ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வம் எழுந்துள்ளது.

பிரபலங்கள் பகிரும் அரபிக்குத்து ரீல்ஸ்

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் மத்தியில் கூட ஹிட் அடித்துள்ளது. பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை நடிகை  பூஜா ஹெக்டே, திவ்யபாரதி, ராஷ்மிகா மந்தனா, சின்னத்திரை நடிகர்கள் பலர் மற்றும் கிரிக்கெட் வீர்ர ஃபாஃப் டு பிளஸ்ஸி உள்ளிட்ட பலர் இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டனர். இந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளார் பாடகி ஸ்வகதா . இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் இப்போது கடற்கரையில் அவரின் சகோதரி மாயாவோடு அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து திருமண வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

ஸ்வகதா  திருமணம்

பல மேடைக்கச்சேரிகளில் எஸ் பி பி உள்ளிட்ட பாடகர்களோடு இணைந்து பாடியுள்ள ஸ்வகதா காற்றின் மொழி, நோட்டா, வஞ்சகர் உலகம் மற்றும் இதய ராஜாவும் இஸ்பேட் ராணியும் உள்ளிட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். மதுரையைச் சேர்ந்த இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்ஷய் குமாருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில் நடந்த திருமணத்தில் அவர்களது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமணம் சம்மந்தமாக அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகின. இந்நிலையில் இப்போது அவர் திருமணம் ஆன கையோடு தனது தங்கையோடு சேர்ந்து அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜாலியோ ஜிம்கானா பாட்டுக்கு நெல்சன் சொன்ன situation இதுதான்… பாடலாசிரியர் பகிர்ந்த தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Married Singer swathaga Arabic kuthu reels with sister

People looking for online information on Arabic kuthu reels, Arabic Kuthu song, Beast, Married Singer swathaga, Singer swathaga will find this news story useful.