மழையும், புயலும் ஒண்ணு சேந்துருச்சு டோய்.. உதயநிதி ரசிகர்களுக்கு செம 'ட்ரீட்' இருக்கு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சந்தித்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

இந்திய இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மற்றும் பல திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

55 வயதாகும் ஏ. ஆர். ரஹ்மான், ஆஸ்கார் விருது, தேசிய விருது, பிலிம்ஃபேர் விருது என பல விருதுகளை வென்று, தமிழ் மண்ணிற்கு அளவில் அடங்காத பெருமைகளையும் சேர்த்துள்ளார்.

தொடரும் இசை ராஜ்ஜியம்

ஆறு முதல் அறுபது  வரை, ரஹ்மானின் இசைக்கு மயங்காத ஆட்களே இல்லை. கிட்டத்தட்ட தான் அறிமுகமாகி 30 வருடங்களான நிலையிலும், தொடர்ந்து தனது இசையால், ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். கடந்த ஆண்டு, இவரது இசையில் வெளியான மிமி, கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட படங்களின் பாடல்கள், பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது.

நீண்டு செல்லும் படங்களின் லிஸ்ட்

அதே போல, பொன்னியின் செல்வன், கோப்ரா, இரவின் நிழல், அயலான், மலையன்குஞ்சு, பத்து தல, வெந்து தணிந்தது காடு, ஆடுஜீவிதம் உள்ளிட்ட பல படங்களுக்கு தற்போது இசை அமைத்தும் வருகிறார். இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இதில், உதயநிதி ஸ்டாலினுடன் நடிகை கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பாஹத் பாசில் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெளியான தகவல்

மேலும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் இன்னும் உறுதியாகாத நிலையில், மாரி செல்வராஜ் - ஏ.ஆர். ரஹ்மான் காம்போ, மிகக் கச்சிதமாக இருக்கும் என்றும், நிச்சயம் இந்த காம்போ இணைந்து பணியாற்ற வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

வைரல் ஃபோட்டோ

இந்நிலையில், இன்று ஏ.ஆர் ரஹ்மான் பிறந்தநாள் என்பதால், பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
 

 

இன்னும் மாரி செல்வராஜ் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான்  இசையமைப்பது குறித்து உறுதியான தகவல் வெளிவராத நிலையில், மாரி செல்வராஜ் பதிவிட்ட இந்த போட்டோ, கிட்டத்தட்ட இந்த கூட்டணியை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இதனால், இருவரது ரசிகர்களும்  மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Mari Selvaraj wishes ar rahman on his birthday with photo

People looking for online information on AR Rahman, Fahadh Faasil, Karnan, Mari Selvaraj, Pariyerum Perumal, Rahman Birthday, Udhayanidhi Stalin will find this news story useful.