மாரி செல்வராஜின் 'மாமன்னன்'.. கேக் வெட்டி கொண்டாடிய பஹத் பாசில், வடிவேல், உதயநிதி! இதான் காரணமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இருந்து BTS போட்டோவை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

Mari Selvaraj Mamannan Shooting Spot BTS Picture
Advertising
>
Advertising

சில நாட்களுக்கு முன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.  மேலும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

Mari Selvaraj Mamannan Shooting Spot BTS Picture

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாமன்னன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சேலத்தில் மே மாதம் முதல் வாரம் துவங்கியது. மே மாதம் 8 ஆம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் மாமன்னன் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டு மொத்த படக்குழுவும் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வடிவேலு, பஹத் பாசில், மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். 

இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

Mari Selvaraj Mamannan Shooting Spot BTS Picture

People looking for online information on A R Rahman, Fahad Faasil, Mamannan, Mari Selvaraj, Udhayanidhi Stalin, Vadivelu will find this news story useful.