BREAKING: உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் நமக்கு கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | FANSக்கு அன்பு முத்தம் கொடுத்த அஜித்..திருச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் AK

சில நாட்களுக்கு முன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியிருந்தது. 

மேலும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான், பொன்னியின் செல்வன், கோப்ரா, அயலான், பத்து தல, வெந்து தணிந்தது காடு, ஆடுஜீவிதம் உள்ளிட்ட பல படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. குருவி, மன்மதன் அன்பு, ஆதவன், ஏழாம் அறிவு, நீர்பறவை, மனிதன் போன்ற படங்களும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படங்களாகும்.

இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு, சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் கடந்த மார்ச்-4 ல் துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. மாமன்னன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சேலத்தில் கடந்த மே மாதம் முதல் வாரம் துவங்கியது. மே மாதம் 8 ஆம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டன.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | அடர்ந்த காட்டில் வேடன் லுக்கில் தனுஷ்.. 'நானே வருவேன்' படத்தின் வேறலெவல் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Mari selvaraj Maamannan 3rd schedule shooting starts today

People looking for online information on Maamannan, Maamannan Movie Updates, Mari Selvaraj, Udhayanidhi Stalin will find this news story useful.