100 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐரோப்பியர்களை எதிர்த்து முதலில் அரபிக்கடலில் கடற்படையை உருவாக்கிய மரக்காரின் உண்மைக்கதையை தழுவி தேசிய விருது வென்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால்  மரக்கார் படத்தில் நடித்துள்ளார். 

Advertising
>
Advertising

இந்த படம் மலையாள சினிமாவில் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ளது. 67 வது தேசிய விருது விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக ’மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’ ஜூரிகளால் தோ்வு செய்யப்பட்டது.  சிறந்த படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு என மூன்று தேசிய விருதுகளை வென்றது.

இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன் பிரனவ் மோகன்லால், அர்ஜூன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பரியதர்ஷன், ஃபாசில், சித்திக், மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்

இந்த படம் 02.12.2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை V கிரியேசன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தாணு கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தயாரிப்பாளர் தாணுவும் தனது டிவிட்டர் பக்கத்தில், "வரலாற்று சிறப்பு மிக்க #MaraikayarArabikadalinSingam திரைப்படத்தை #VCreations சார்பாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதில் பெருமைக்கொள்கிறேன்". என டிவீட் செய்து உறுதி செய்துள்ளார்.

 

Tags : Thanu, Dhanu

Maraikayar Arabikadalin Singam TN Release by theVcreations

People looking for online information on Dhanu, Thanu will find this news story useful.