"இந்தியா முழுக்க விஜயை விரும்புவாங்க!".. 'THALAPATHY65'-ல் பணியாற்றும் நண்பன் பட கலைஞர் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்து வரும் அடுத்த திரைப்படம் தளபதி 65.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அண்மையில் அன்பறிவ் மாஸ்டரின் டீமைச் சேர்ந்த திலீப் குமார்  இந்த படத்தின் சண்டை பயிற்சி தொடர்பாக பேசும்போது அடுத்த வருடம் கேஜிஎப் திரைப்படத்தின் காட்சிகளை மறந்து சண்டைக் காட்சிகளுக்காக மட்டுமே தளபதி65-ஐ பற்றி அனைவரும் பேசிக் கொண்டு இருப்பீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது விஜய் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் உண்டாக்கியது.

இந்த நிலையில் தளபதி 65 படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், “இந்த அருமையான மனிதநேயமிக்க ஒட்டுமொத்த மாநில மக்களும் விரும்பக்கூடிய மனிதர் விரைவில் நாடு முழுவதும் விரும்பக்கூடியவராக ஆவார்.

தளபதி 65 இந்தியா முழுவதும் செல்லவிருக்கிறது. நண்பன் படத்தில் எந்த இடத்தில் விட்டோமோ, அந்த நினைவுகளுடன் விஜய்யுடன் இணைந்து பணிபுரிகிறேன். கெட் ரெடி போக்ஸ்!” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: "பிண்றியேடா மச்சான்.!".. 'விஜய் டிவி' புகழின் போஸ்டுக்கு மாஸ்டர் பிரபலத்தின் வைரல் கமெண்ட்!

தொடர்புடைய இணைப்புகள்

Manoj Paramahamsa Thalapathy65 cinematographer விஜய்

People looking for online information on Manoj Paramahamasa, Nanban, Nelson Dilipkumar, Sun pictures, Thalapathy65, Vijay will find this news story useful.