நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த மனோபாலா, ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையும் இயக்கியிருந்த மனோபாலா, சிறந்த இயக்குனர் என்ற பெயரையும் எடுத்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners

இதனையடுத்து, சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கி வந்த ஒரு சூழலில் கே. எஸ். ரவிக்குமாரின் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து இன்று ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், காமெடி ரோல்களிலும் மனோபாலா நடித்து வருகிறார்.
மனோபாலாவின் பிரத்யேக பேட்டி..
இந்த நிலையில், தற்போது நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் மனோபாலா அளித்துள்ளார். அதில், அதிகம் சினிமா பற்றி தெரியாத நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை மனோபாலா பகிர்ந்து கொண்டார்.
செல்ஃபி கேட்கும் போது..
அப்போது வெளியே செல்லும் போது மக்கள் ஏதாவது வசனம் பேச சொல்லி கேட்கிறார்களா என்றும் அவர்கள் கொடுக்கும் வரவேற்பு எப்படி இருக்கிறது என்றும் கேள்வி கேட்கப்பட இதற்கு பதிலளித்த மனோபாலா, "அதெல்லாம் கேட்கலாம் சார். அப்புறம் போட்டோ எல்லாம் கூட எடுத்துக்கலாம். ஆனா செல்ஃபி எடுக்குறது எங்களுக்கு எல்லாம் என்ன ஆகுதுன்னா, நமக்கு இந்த கொரோனா நேரத்துல செல்ஃபின்னு பக்கத்துல வந்து முத்தம் கொடுக்குற மாதிரி வந்துடறாங்க. எனக்கு பயமாயிடுது.
Images are subject to © copyright to their respective owners
அவரு மேல உச்சகட்ட கோபம்..
ஒரு தடவை திருவண்ணாமலை கோவில்ல சுத்திட்டு வரேன். செல்ஃபி சார்ன்னு ஒருத்தரு வந்தாரு. எனக்கு அவரு மேல உச்சக்கட்ட கோபம் வந்துருச்சு. கோவிலுக்குள்ள படம் எடுக்கக்கூடாதுன்னு அவங்க கேட்டுகிட்டாங்க. எல்லா பெரிய மனுஷங்களும் அண்ணாமலையார் கோவிலுக்கு தரிசனம் பண்ண வராங்க, நீங்க ஆரம்பிச்சு வச்சா அதுவே ஒரு விஷயமா ஆயிரும் சார், அதனால அந்த மாதிரி பண்ணாதீங்க சார். கோயிலுக்குள்ள எடுத்துக்காதீங்க, கோவில் வாசல்ல போய் எடுங்கன்னு சொல்லிட்டாங்க.
அவன் பிரஹாரத்தில் எடுக்குறான். உடனே கடுப்பாகி, 'நீ என்ன பார்க்க வந்தியா அண்ணாமலையை பார்க்க வந்தியான்னு' கேட்டேன். 'உங்களைத் தான் சார் பார்க்க வந்தேன். என்னப்பா சொல்றேன்னு கேட்டா, 'செல்பி எடுத்தா நீங்க கிடைச்சுருவீங்க, அவரு இங்கதானே கிடக்கிறாரு. அவரை எப்ப வேணா பாத்துக்கலாம்' அப்படின்னு சொன்னாரு.
அதுக்கு காரணம் இது தான்..
சிவகுமார் செல்ஃபியை தட்டி விட்டுட்டாரு, கேமராவை தட்டி விட்டுட்டாருன்னா அந்த பொசிஷன்ல போய் நின்னு பாருங்க அப்பதான் தெரியும். அப்படியே உச்சகட்ட வெறுப்பு ஒன்னு வரும். இதே நீங்க போட்டோ எடுக்கணும் சார்ன்னு சொல்லிட்டு இன்னொருத்தர் கையில கேமரா கொடுத்துட்டு பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துக்கலாம். ஃபோட்டோ எடுக்குறதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உங்களால தான் நாங்க வந்துருக்கோம் அப்புறம் ஃபோட்டோ எடுக்குறதுக்கு சோம்பேறித்தனம் படுவோமா. ஆனா செல்ஃபின்றது என்ன கலாச்சாரம் என்பது எனக்கு புரியல" என மனோபாலா கூறினார்.