நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த மனோபாலா, ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையும் இயக்கியிருந்த மனோபாலா, சிறந்த இயக்குனர் என்ற பெயரையும் எடுத்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
பன்முகத் திறன் கொண்ட மனோபாலா
இதனையடுத்து, சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கி வந்த ஒரு சூழலில் கே. எஸ். ரவிக்குமாரின் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து இன்று ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், காமெடி ரோல்களிலும் மனோபாலா நடித்து வருகிறார்.
இயக்குனர் என்ற இடத்தில் இருந்து நடிக்க ஆரம்பித்த மனோபாலாவின் காமெடி காட்சிகள், பெரிய அளவில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. நடிப்பு, இயக்கம் மட்டுமில்லாமல் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மனோபாலா மாறி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
இந்த நிலையில், தற்போது நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் மனோபாலா அளித்துள்ளார். அதில், அதிகம் சினிமா பற்றி தெரியாத நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை மனோபாலா பகிர்ந்து கொண்டார். அப்போது முன்பொரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் போட்ட பிளான் குறித்து மனோபாலா தற்போது தெரிவித்துள்ள விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.
ரஜினி போட்ட பிளான்..
இதுபற்றி பேசிய மனோபாலா, "அப்ப எல்லாம் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து சூட்டிங் நடக்கும். அப்ப கண் எல்லாம் அப்படியே சொக்கும். ரஜினி சார் நைஸா வருவாரு. 'பாலா சார் சாயங்காலம் மணி 4 ஆகுது. கொஞ்சம் ஒரு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் விட்டு எனக்கு நைட் ஷூட்டிங் இன்னைக்கு கேன்சல் பண்ணா நல்லா இருக்கும்' அப்படின்னு சொல்லுவாரு. உங்களுக்கு நைட்டு வேணாமான்னு கேட்பேன். இல்ல வேணாம்னு சொல்லுவாரு.
'எனக்கு கூட ரொம்ப டயர்டா இருக்குன்னு' சொன்னேன்" என குறிப்பிட்டு தொடர்ந்து பேசியிருந்த மனோபாலா, சூட்டிங் ஸ்பாட்டில் ராதிகா இருப்பதாகவும், அவரை மயக்கம் போட சொன்னால் உடனடியாக அவர் மயக்கம் போட்டு பின்னர் படப்பிடிப்பை நிறுத்தி விடலாம் என ரஜினி திட்டம் போட்டதையும் மனோபாலா குறிப்பிட்டார்.
மயக்கம் போட்டு விழுந்த ராதிகா
தொடர்ந்து ராதிகாவிடம் மயக்கம் போட சைகை கொடுத்ததும் அவர் அப்படியே மயங்கி போவது போல நடிப்பது பற்றி மனோபாலா குறிப்பிட, "ராதிகா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பேக்கப் பேக்கப்ன்னு சொல்லி ராதிகாவை கூப்பிட்டு வந்து கார்ல தூக்கிட்டு வருவாங்க. முன்னாடி ரஜினி சார் ஏறிடுவாரு. அப்படியே கார் ஒரு 2 கிலோமீட்டர் போறது வரைக்கும் தான் சைலன்ட்டா இருக்கும். இரண்டு கிலோமீட்டர் தாண்டுனதுக்கப்புறம், 'என்னதான் சினிமால இவ்வளவு ரசிகர்கள் இருந்தாலும், நம்மளுக்கு தேவையான நேரத்தை நம்மளே ஒதுக்கி வாங்கிக் கொள்வது நல்லதுன்னு' ரஜினி சார் சொன்னார். இந்த மாதிரி அட்ராசிட்டிஸ் எல்லாம் நிறைய பண்ணுவோம்" என மனோபாலா தெரிவித்தார்.