ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் மன்மதன் & லவ் டுடே 'மாமாக்குட்டி' SYNC! ஹைலைட்டே அந்த BGM தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மன்மதன் படத்தின் ஒரு காட்சியை லவ் டுடே படத்தின் மாமா குட்டி இசையுடன் Sync செய்து ரசிகர் ஒருவர் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 'தங்கலான்'.. ஷூட்டிங்கில் பா. ரஞ்சித்.. விக்ரம் எடுத்த வைரல் ஃபோட்டோ..

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். 

நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியதை ஒட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "லவ் டுடே இன்னும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் மூன்றாவது வாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், லவ் டுடே திரைப்படத்திற்கும் எனக்கும் அளித்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டிவி சேனல்கள், ரேடியோக்கள், யூடியூப் சேனல்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், இன்ஃப்லூயன்ஸர்கள் ஆகியோரின் ஆதரவு அளப்பரியது. மீம் கிரியேட்டர்கள், வீடியோ எடிட்டர்கள் என்னை ஆதரித்ததற்காகவும், என்னை ஊக்குவித்ததற்காகவும் என் நன்றியை  தெரிவித்து கொள்கிறேன், அவர்களின் படைப்பாற்றல் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளது. அபரிதமான அன்புடன் பிரதீப் ரங்கநாதன்" என கூறியுள்ளார்.

இச்சூழலில் இந்த படத்தின் மாமாக்குட்டி பாடலின் இசையை சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் படத்தின் மொட்டை மதன் - சிந்து துலானி இடையேயான காட்சியை மாமாக்குட்டி பாடலின் இசையோடு ஒருங்கமைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

மன்மதன் படத்திற்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "13 வருடத்தில் எனக்கு இது First Time".. 'துணிவு' டப்பிங்கில் இருந்து 'சார்பட்டா' நடிகரின் வைரல் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Manmadhan Love Today Fan made mama kutty mix video went viral

People looking for online information on Love today, Love Today Fan made mama kutty mix, Manmadhan will find this news story useful.