தாஜ்மஹாலில் நடிகை மஞ்சு வாரியர்.. நண்பர்களுடன் இந்த பிரபல நடிகரும் இருக்காரு! PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம்.. படத்தோட ஷூட்டிங் எப்போ? BREAKING அப்டேட்!

தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பொங்கலுக்கு ரிலீசான துணிவு படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று பொங்கலை முன்னிட்டு வெளியானது. இந்தத் திரைப்படம்  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர்கள் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த BMW பைக் வாங்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆக்ராவிற்கு சுற்றுலா சென்றுள்ள மஞ்சு வாரியர், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாஜ்மஹாலில் இருந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தமது நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சுற்றுலாவில் நடிகர் குஞ்சாக்கோ போபன் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் மஞ்சு வாரியருடன் இடம் பெற்றுள்ளனர். குஞ்சாக்கோ போபனின் தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார்.

Also Read | DASARA: நானியின் லேட்டஸ்ட் பதிவு.. REPLY போஸ்ட் மூலம் பதில் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!😍 செம்ம வைரல்

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier with Kunchako boban in Taj Mahal

People looking for online information on Kunchako Boban, Manju Warrier, Taj mahal will find this news story useful.