"இத எதிர்பார்க்கவே இல்லையே".. ஜிப்ரானுடன் மஞ்சு வாரியர்.. துணிவு படத்தின் தாறுமாறு UPDATE!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படம் குறித்து நடிகை மஞ்சு வாரியர் தற்போது பகிர்ந்துள்ள அப்டேட் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இதற்கு முன்பாக வலிமை திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. H. வினோத் இயக்கி இருந்த இந்த திரைபடத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக துணிவு திரைப்படம் மூலம் நடிகர் அஜித் குமார், இயக்குனர் H. வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைகின்றனர்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ரிலீஸிற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், படத்தின் அப்டேட்டையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், துணிவு படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியார் அசத்தலான அப்டேட் ஒன்றை தற்போது கொடுத்துள்ளார். மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். தமிழில் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'அசுரன்' படத்தின் மூலம் அறிமுகமான மஞ்சு வாரியர், இதனைத் தொடர்ந்து துணிவு படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ளார்.

அதே போல, சமீபத்தில் துணிவு படத்தின் டப்பிங்கில் கலந்து கொண்டது குறித்தும் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்த மஞ்சு வாரியார், இந்த படத்தில் பாடல் ஒன்றை பாடி உள்ளது குறித்து தற்போது பகிர்ந்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மஞ்சு வாரியார், "ஜிப்ரானுக்காக பாடியதில் மகிழ்ச்சி. துணிவு படத்தின் ஒரு இன்ட்ரெஸ்டிங் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் அதை கேட்க காத்திருக்கிறோம் ❤️" என குறிப்பிட்டுள்ளார்.

துணிவு படத்தில் வரும் Chilla Chilla பாடல் குறித்து சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ள நிலையில், தற்போது மஞ்சு வாரியரும் பாடல் பாடியுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மஞ்சு வாரியார் இதற்கு முன்பும் சில பாடல்களை பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Manju warrier sung in thunivu movie update with ghibran

People looking for online information on Ajith Kumar, Ghibran, H Vinoth, Manju Warrier, Thunivu will find this news story useful.