அஜித்துடன் மஞ்சு வாரியர் BIKE RIDE PHOTOS.. ஆச்சரியத்தில் கமெண்ட் செய்த கல்யாணி பிரியதர்ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாருடன் பிரபல நடிகை மஞ்சு வாரியர் பைக் ரைடு செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | PS1 போஸ்டர்கள் டிசைனர் இவரா? போஸ்டர் உருவான விதம் குறித்து வெளியான சூப்பர் தகவல்!

நடிகர் அஜித் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு  
ஐரோப்பிய நாடுகளில் சில நாட்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

பின்னர் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பின்னர் நடிகர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் & லே பகுதியில்  பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த பைக் சுற்றுப்பயணத்தில் நடிகை மஞ்சு வாரியர் சில நாட்களுக்கு பின் இணைந்தார்.  இமயமலையில் உள்ள கர்டூங்களா பகுதியில் எடுத்த புகைப்படங்களை சில நாட்களுக்கு முன் மஞ்சு வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

பின்னர் பைக் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நடிகர் அஜித் குமார் & மஞ்சு வாரியர் துணிவு படத்தின் படப்பிடிப்புக்கு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சென்றுள்ளனர். தற்போது நடிகை மஞ்சு வாரியர் நடிகர் அஜித் குமாருடன் இணைந்து துணிவு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.‌

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இமயமலையில் பைக் ரைடு சென்ற போது எடுக்கப்பட்ட சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்களை கண்டு நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சரியத்தில் வாவ் எமோஜிக்களை மஞ்சு வாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிலுக்கு மஞ்சு வாரியர் இதய எமோஜிக்களுடன் கமெண்ட் செய்துள்ளார்.

 

Also Read | VIDEO: வாரிசு ஷூட்டிங்கில் PS1 பாட்டுக்கு VIBE-ஆகும் விஜய்.. பிரபல நடிகர் சொன்ன செம தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier Shared Bike Ride Photos with Ajith Kumar

People looking for online information on Ajith Kumar, Manju Warrier, Manju Warrier Shared Bike Ride Photos will find this news story useful.