THUNIVU : 'துணிவு' அடுத்த கட்ட பணியில் நடிகர் அஜித்.. மஞ்சு வாரியர் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தின் அப்டேட் போட்டோவுடன் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிங்கங்களுக்கு மத்தியில் மனைவியுடன் ராம்சரண்.. வைரலாகும் டூர் போட்டோஸ் & வீடியோ!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர். நடிகர் சமுத்திரக்கனி, பிரேம் குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் பிரேம் குமார், வல்லவன், மஞ்சு வாரியர், அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிவு படத்திற்காக நடிகர் அஜித்  டப்பிங் பேசும் காட்சியின் புகைப்படத்தை  பகிர்ந்துள்ளார். நீல நிற சட்டையில் நவநாகரீக தோற்றத்தில் அஜித் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

மேலும் நடிகர் அஜித், துணிவு படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | சிக்கன் பிரியாணி & புரோட்டா.. எந்திரன் வசனத்துடன் அதிதி ஷங்கர் பகிர்ந்த செம வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier Shared Ajith Kumar Thunivu Dubbing Photo

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Thunivu Dubbing Photo, Manju Warrier, Thunivu will find this news story useful.