THUNIVU : அஜித்தின் துணிவு .. நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த சூப்பர் அப்டேட்.. வைரல் PIC!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் தயாராகி வருகிறது. 2023 ஆம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக துணிவு திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Manju warrier dubbing for thunivu movie share pic
Advertising
>
Advertising

வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்களை தொடர்ந்து, இயக்குனர் H. வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார்.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். துணிவு படத்தின் போஸ்டர்கள் கூட வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

மேலும், அஜித் குமாருடன் மஞ்சு வாரியர், ஜான் கொக்ககென் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து திரைப்படம் வெளியாக உள்ளதால் துணிவு படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கியும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், துணிவு படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் புதிய அப்டேட் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுத்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து பல அசத்தலான படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

இதனையடுத்து, அஜித் நடித்துள்ள துணிவு படத்திலும் அவர் நடித்து வருவது குறித்து ஏற்கனவே அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, தற்போது துணிவு படத்திற்காக டப்பிங்கில் தான் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார்.

 

"No Guts, No Glory" என தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ள மஞ்சு வாரியர், டப்பிங் ஸ்டூடியோவில் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Manju warrier dubbing for thunivu movie share pic

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Manju Warrier, Thunivu will find this news story useful.