MANJU WARRIER: கிருஷ்ண பரமாத்மாவாக கலக்கிய நடிகை மஞ்சு வாரியர்.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை மஞ்சு வாரியர் கிருஷ்ணர் வேடமிட்டு நடித்த நாடகம் தொடர்பிலான ஃபோட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | “அறம் வெல்லும்” - வெளியேறிய விக்ரமன்.. அம்பேத்கர் படத்தை வணங்கி நெகிழ்ச்சி.. bigg boss 6

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் இறங்கி பட்டையை கிளப்பினார் மஞ்சு வாரியர்.

இந்தப்படத்தின் நடிகர் அஜித் செய்த பைக் பயணத்திலும், தவிர, துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ பாடலிலும் தனது பங்களிப்பை மஞ்சு வாரியர் கொடுத்திருந்தார்.  முன்னதாக கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார். அதன் பிறகு அவர் பேசுகையில், “முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. கேரளாவில் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்.” என்றார்.

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர், கிருஷ்ணர் வேடம் தரித்து நாடகத்தில் பங்கேற்ற ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முன்னதாக தன் இன்ஸ்டாகிராமில் “சுமார் 3 வருடங்களுக்கு பிறகு மேடை நாடகத்தில் பங்கேற்கிறேன்.

குரு கீதாபத்மகுமார் அவர்களால் உருவாக்கப்பட்ட ராதே ஷ்யாம் மேடை நாடகம் இது. இதன் மூலம் சூரிய விழாவின் ஒரு பகுதியாவதில் பெருமிதம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.  இந்த நாடக நிகழ்வு திருவனந்தபுரம் ஏகேஜி சென்டரில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Also Read | தளபதி 67 படத்தில் பகத் பாசில்?.. LCU-வா?.. செம பதில் அளித்த பகத்!

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier as Lord Krishna in Radhe Shyam Stag Play

People looking for online information on Ajith, Manju Warrier, Radhe Shyam, Thunivu will find this news story useful.