"சூப்பர் ஸ்டார் ரைடர்".. நடிகர் அஜித் குமாரை பாராட்டிய மஞ்சு வாரியர்.. இது தான் காரணமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குறித்த நடிகை மஞ்சு வாரியரின் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | நண்பரின் DUCATI பைக்கில் அஜித்குமார்.. கெத்து Look-ல் தோரணையான போட்டோஸ்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது.

இந்த சென்னை படப்பிடிப்பு  காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. 

இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார்.  இந்த சென்னை படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு  விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது.

விசாகப்பட்டினம் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் அஜித் தனது சக பைக் ரைடர்களுடன் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பைக் சுற்றுப்பயணம் குறித்து AK61 நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! ஆர்வமுள்ள பயணி என்பதால், நான்கு சக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா செல்வது இதுவே முதல் முறை. இந்த அற்புதமான பைக்கர்களின் குழுவில் சேர என்னை அழைத்த அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியாவுக்கு நன்றி. அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியாவின் சுப்ரஜ் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரை அஜித் சார் அறிமுகப்படுத்தியது ஒரு மரியாதை! நன்றி சார்! நிறைய அன்புகள். என்னுடன் இணைந்ததற்கு நன்றி பினேஷ் சந்திரா." என மஞ்சு வாரியர் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | இமயமலையில் சாகச பைக் RIDE.. அஜித்துடன் இணைந்த பிரபல முன்னணி நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier about AK Ajith Kumar Super Star Rider AK 61

People looking for online information on Ajith Kumar, Manju Warrier will find this news story useful.