"பேங்க் உள்ள அஜித் டான்ஸ்.. தியேட்டர்ல அதை பார்க்கனும்".. 'துணிவு' குறித்து மஞ்சு வாரியர் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் டிரெய்லரில்  நடிகர் அஜித் நடனம் குறித்து மஞ்சு வாரியர் பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. .

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.



துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள்தான் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 54 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ளார். துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியர் 'கண்மணி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த பேட்டியில், "துணிவு டிரெய்லரில் சர்ப்ரைஸாக இருந்தது வங்கி உள்ள அஜித் சார் துப்பாக்கியை கையில் வச்சுட்டு டான்ஸ் ஆடுறார். அது பத்தி என்ன நினைக்கிறீங்க? என்ற கேள்விக்கு மஞ்சு வாரியர், "அந்த சீன் எடுக்கும் போது நான் இல்லை. அப்புறம் அந்த சீன் பத்தி சார் நல்லா வந்திருக்குனு சொல்லிருந்தார். டிரெய்லர்ல தான் நான் பாத்தேன். இன்னும் நிறைய இந்த சீனை தியேட்டரில் பாக்க ஆவலோடு இருக்கேன்" என பதில் அளித்துள்ளார்.

"பேங்க் உள்ள அஜித் டான்ஸ்.. தியேட்டர்ல அதை பார்க்கனும்".. 'துணிவு' குறித்து மஞ்சு வாரியர் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier about Ajith Dance in Thunivu Trailer

People looking for online information on Ajith Kumar, Manju Warrier, Thunivu will find this news story useful.