பழனி முருகன் கோயிலில் கௌதம் & மஞ்சிமா.. ஜோடியாக ரோப் காரில் சென்று சாமி தரிசனம்..! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்

கடந்தாண்டு நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

கடந்த ஆண்டு நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.

இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் இருவரும் ஜோடியாக பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் சென்ற அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு விரைவு தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. திருமணமாகி முதல் முறையாக கௌதம் கார்த்திக் &  மஞ்சிமா மோகன் பழனி முருகன் கோவிலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பழனி முருகன் கோயிலில் கௌதம் & மஞ்சிமா.. ஜோடியாக ரோப் காரில் சென்று சாமி தரிசனம்..! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Manjima Mohan Gautam Karthik Visit Palani Murugan Temple

People looking for online information on Gautham Karthik, Manjima Mohan will find this news story useful.