கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் பிரபல ஃபோட்டோ கிராபருடன் இணைந்து ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

Also Read | Varisu : ரஞ்சிதமே.. விஜய் பாடும் 'வாரிசு' முதல் சிங்கிள்.. வெளியான GLIMPSE வீடியோ.!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்
அதே போல் கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர், காதல் மன்னன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது தொடர்பான மஞ்சிமா மோகன் பதிவில், "மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போன போது நீ என் வாழ்வில் ஒரு காவல் தேவதை போல வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய்!!
ஒவ்வொரு முறையும் நான் முழு குழப்பமாக இருந்த போது, நீ என்னை தெளிவடைய செய்தாய். என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய்.
நான் உன்னிடம் நேசிக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், நான் யார் என்பதற்காக நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதுதான்!
நீ எப்போதும் எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் இருப்பாய்" என மஞ்சிமா மோகன் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மோனோ க்ரோம் தன்மையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. ஜாக்சன் ஜேம்ஸ் அணியினர் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
Also Read | "எனக்கு கார் ஓட்ட தெரியாது".. இயக்குனர் மித்ரன் கார்த்தியுடன் கார் ரைடு.. ஜாலியான வீடியோ!