PONNIYIN SELVAN PS1: முதல்முறையாக தமிழ் சினிமாவில்.. "பொன்னியின் செல்வன்" தரவிருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவில் முதல்முறையாக புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | KGF புகழ் பிரசாந்த் நீல்லின் 20 ஆண்டு கால கனவுப்படம்.."NTR 31" படத்தின் மாஸ் அப்டேட்!

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.  

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஏ.‌ ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் IMAX திரைகளில் இந்த பொன்னியின் செல்வன் படம் திரையிடப்பட உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ​​

IMAX திரையரங்குகளில் படம் பார்க்க சாதாரண திரையரங்குகளை விட மூன்று மடங்கு அதிக டிக்கெட் கட்டணத்தை திரையரங்குகள் வசூலிக்கின்றன.  அதற்கு காரணம் பிரம்மாண்டமான திரைகளும் பிரத்யேக சப்தங்களுமே.

IMAX என்பது உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள், திரைப்பட வடிவங்கள், ஃபிலிம் ப்ரொஜெக்டர்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றின் தனியுரிமை அமைப்பாகும், இது உயரமான அகண்ட திரைகளுடன் (Aspect Ratio 1.43:1 அல்லது 1.90:1) நிறைய இருக்கைகள் கொண்ட மிகப் பெரிய திரைகளைக் கொண்டது.

ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் ஐமேக்ஸ் தியேட்டர் இந்தியாவில் சிறந்த IMAX ஆக உள்ளது. அதன் 72-அடி உயரம், 95-அடி அகல திரை உடன் 635 இருக்கைகள் மற்றும் 12,000-வாட் ஒலி அமைப்பு சிட்னி ஐமாக்ஸ் திரையரங்கிற்கு அடுத்து மிகப்பெரிய IMAX திரை இது தான். உலகின் இரண்டாவது பெரிய IMAX 3D திரை ஆகும்.

தமிழ் சினிமாவில் முதல்முறையாக பொன்னியின் செல்வன் படம் ஐமேக்ஸ் வடிவத்தில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இதற்கு முன் RRR திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் ஐமேக்ஸ் வடிவத்தில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

Also Read | "சர்தார்" படத்தின் புதிய போஸ்டர்... வயதான கார்த்தி லுக் சும்மா மிரட்டுதே! பக்கா மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Maniratnam Vikram Karthi Ponniyin Selvan Movie in IMAX

People looking for online information on Karthi, Maniratnam, Ponniyin Selvan Movie updates, Ponniyin Selvan part 1, Vikram will find this news story useful.