‘பொன்னியின் செல்வன்’ ஸ்டாருக்கு இயக்குநர் மணிரத்னம் பாராட்டு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் சார்பாக பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

திரைத்துறையில் வித்தியாச முயற்சியாக ஒரே கதாபாத்திரமாக படம் முழுவதும் பார்த்திபனே நடித்த இந்த திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பே பல்வேறு இந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இப்படம் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பாலிவுட் படமான ‘கல்லி பாய்’ திரைப்படம் இந்தியா சார்பாக அனுப்பப்பட்டது.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குநர் மணிரத்னம் தனது பாராட்டுக்களை தெரிவித்தது குறித்து நடிகர் பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘என் சினிமா குரு மணிரத்னம் அவர்களிடம் இருந்து ஒத்த செருப்புக்கான பாராட்டு.. எழுத்து, நடிப்பு, இயக்கம் அனைத்தும் அட்டகாசம். புதுமையான இந்த தனி ஐடியாவுக்கும், அதனை தைரியமாக முழு படைப்பாக மாற்றிய அசாத்திய முயற்சிக்கும் பாராட்டுக்கள் பார்த்திபன்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Maniratnam praises Ponniyin Selvan star Parthiban for his Oththa Seruppu

People looking for online information on Mani Ratnam, Oththa Seruppu Size 7, Ponniyin Selvan, Radhakrishnan Parthiban will find this news story useful.