தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, அதற்கேற்ப சினிமாக்கள் உருவாக்குவதை மணிரத்னம் வழக்கமாக கொண்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கும் ஒவ்வொரு படமும், நிச்சயம் ஏதாவது ஒரு விஷயத்தில் தனித்துவமாக விளங்கக் கூடியவை தான்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம்..
கடைசியாக, செக்கச் சிவந்த வானம் படத்தை இயக்கி இருந்த மணிரத்னம், அடுத்ததாக இயக்கி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதில், பலரின் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இதே போல், பொன்னியின் செல்வன் போஸ்டர்களும் வெளியாகி இருந்தது.
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகளும் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொண்டு வருகிறார். அதே போல, பிரபல கலை இயக்குனர் தோட்டாதரணி இந்த படத்தில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.
அசத்தலான அப்டேட்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படம் குறித்து அசத்தலான அப்டேட் ஒன்று தற்போது வெளி வந்துள்ளது. "The Cholas Are Coming" என குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றை இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், கார்த்தி உள்ளிட்ட பலரும் பகிர்ந்துள்ள நிலையில், "சாகசங்கள் நிறைந்த வாரத்திற்கு தயாராகுங்கள். சோழர்கள் வருகிறார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
முக முக்கியமான நாவல்களில் ஒன்றான பொன்னியின் செல்வனை திரை வடிவில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில், இந்த வாரம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் குறித்த அப்டேட்டுகள் வெளி வரவுள்ளது, ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தி உள்ளது.