PONNIYIN SELVAN AUDIO LAUNCH: "மணி சார் & ARR சார்..." பொன்னியின் செல்வன் பட விழாவில் ஐஸ்வர்யா ராய் மாஸ் பேச்சு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார்.   இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகை அதிதி ராவ் மற்றும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், நிகழ்ச்சியில் பேசுகையில்,  “வணக்கம்.. இந்த டிரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது மிக மிக அருமையான படம். எங்களுக்கு மிகவும் நெருக்கமான படம். மிகவும் ஒரு அற்புதமான குழுவினருடன் நான் இந்த படத்தில் பணிபுரிந்துள்ளேன். மணிரத்னம் சார், ரஹ்மான் சார் போன்ற திறைமைசாலிகளுடன் எனது ஆரம்ப கால திரை பயணத்தில் பணிபுரிந்ததை பாக்கியமாக கருதுகிறேன்.

மணி சார் என்னுடைய குரு.. எப்போதுமே குரு.. அவருடன் நிறைய திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளேன். ஒவ்வொரு முறை அவருடன் பணிபுரியும் போதும், மறக்க முடியாத தருணமாகாவே நிறைந்திருக்கும். மிகவும் ஸ்பெஷலாகவும் நான் உணர்வேன். இருவர் படத்தின் மூலம் எனது பயணம் தொடங்கியது. அதன் பின்னர், மணி சார் இயக்கத்தில் குரு, இராவணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தேன்.

தற்போது உங்கள் கனவு புராஜக்டில் என்னை நடைக்க வைத்ததற்கு நன்றி சார்..  மணி சார், ரஹ்மான் சார் மேஜிக்கலான இருவர். அது உண்மையில் ஆசீர்வாதம்தான். அது உயிரோட்டமானது, ஆர்கெஸ்ட்ரா, பாடகர் அனைவருக்கும் பாராட்டுகள்..  ரஜினி சார், கமல் சார் உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி” என கூறி உள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Maniratnam ARR magical duo Aishwarya Rai PS1 Audio Launch

People looking for online information on AR Rahman, Ponniyin Selvan, Ponniyin Selvan part 1 will find this news story useful.