கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | PS1: “Bro-னு கூப்பிட கஷ்டமா இருந்துச்சு” - விக்ரம் & ஜெயம் ரவியுடன் நடித்தது குறித்து த்ரிஷா.!
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் ஒன்றாக மேடையில் தோன்றி இருந்தனர். முன்னதாக விக்ரம் படத்தின் வெற்றிக்காக கமலை வாழ்த்தவும் செய்தார் ரஜினிகாந்த். மேலும், இருவரும் பொன்னியின் செல்வன் நாவல் தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதில், தளபதி படத்தின் ஷூட்டிங் சமயத்தின் போது நடந்த சில சுவரஸ்யமான சில தகவல்களை நினைவு கூர்ந்தார் ரஜினிகாந்த். அதில், “தளபதி படத்திற்காக நான் நடிக்க சென்ற போது, எனக்கு சற்று தளர்வான காஸ்ட்யூம் கொடுக்கப்பட்டது. பின்னர் அதனை நான் சற்று இறுக்கமாக ஆக்க சொன்னேன். அந்த ஆடையுடன் நான் சென்றதும், மணி சார் என்னிடம் காஸ்ட்யூம் மாற்ற சொன்னார். இதற்கு நான் விளக்கமும் கொடுத்தேன். பின்னர், தோட்டாதரணி மற்றும் மணி சார் இணைந்து டேக் போலாம் என கூறினார்கள்.
பொதுவாக, நான் எல்லா ஏமோஷன்களுக்கும் ஒரு ‘Stock ஷாட்’-ஐ தயார் நிலையில் வைத்திருப்பேன். இந்த படத்தில், அழுகை, கோபம், காதல் என்ன அனைத்துக்கும் Stock ஷாட் பயன்படுத்தினேன். ஆனால், அது எதுவும் மணி சாருக்கு பிடிக்கவில்லை. உடனடியாக நான் கமலுக்கு போன் செய்தேன். கமல்.. நான் மணி சாரின் இந்த படத்தில் நடிக்கிறேன் என்பதை விளக்கி, அவருக்கு நான் நடிக்கும் ஷாட் ஓகே ஆகவில்லை, என்ன பண்லாம்? யோசனை கூறுங்கள் என கேட்டேன்.
இதற்கு கமல் எனக்கு ஒரு டிப்ஸ் கொடுத்தார். அதாவது ‘மணி சாரை நடிக்க சொல்லி நீங்கள் கேளுங்கள். ஒரு வார்த்தையும் பேசாமல், அதனை உற்று கவனித்து கொள்ளுங்கள். அதன் பிறகு, அதனை யோசித்து கொண்டே அங்கும் இங்குமாக ஆழ்ந்த யோசனையில் நடந்து செல்லுங்கள். பின்னர் அவரிடம், ரெடி சார் டேக் போலாம் என கூறுங்கள்’ என்று கமல் எனக்கு ஆலோசனை வழங்கினார். அதே போல நானும் செய்தேன். கடைசியில் மணி சார் ஷாட் ஓகே என கூறினார்..” என கலகலப்பாக ரஜினிகாந்த் பேசினார்.
Also Read | "PS-ல இந்த கேரக்டர் நான் பண்ணவானு கேட்டேன்.. மணி சார் ஒத்துக்கவே இல்ல.!"- ரஜினி..