பொன்னியின் செல்வன் விழாவில் VJ மணிமேகலை அட்ராசிட்டி.. க்யூட் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் RJ விக்னேஷ்காந்த் திருமணம்.. கலந்து கொண்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன்.!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பல சுவாரஸ்ய விஷயங்களை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

இதனிடையே, பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா அரங்கத்தில் தான் செய்த விஷயம் தொடர்பாக குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக வரும் ஜெயம் ரவி பயன்படுத்திய குதிரை, பொன்னியின் செல்வன் நிகழ்ச்சி அரங்கத்தில் இருந்தது. இதற்கு, தான் பிஸ்கட் கொடுக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை பகிர்ந்துள்ளார்.

மேலும் தனது கேப்ஷனில், "இந்த குதிரை நடிக்கும் முதல் படத்துக்கு வாழ்த்தி மகிழ்கிறேன். குதிரைக்கு பிஸ்கட் கொடுக்கும் போது எடுத்த வீடியோ" என்றும் மணிமேகலை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | PS1: "நாவல் படிக்கும்போது நான் இந்த Role .. விஜயகாந்த் இந்த Role -னு தோனுச்சு" - ரஜினி

 

தொடர்புடைய இணைப்புகள்

Manimegalai shares video with horse from ponniyin selvan movie

People looking for online information on Ponniyin Selvan Audio Launch, Ponniyin Selvan part 1, VJ Manimegalai will find this news story useful.