வேறமாரி!! இதவிடவா சூப்பரா பதில் வேணும்? மணநாளில் மணிமேகலை - ஹுசைனின் தெறிக்கவிடும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் குக் வித் கோமாளி எண்டர்டெயினர் மணிமேகலை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமது நான்காம் ஆண்டு திருமண நாள் குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

manimegalai hussain mass reply on wedding anniversary video
Advertising
>
Advertising

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருந்த மணிமேகலை கடந்த 2017-ஆம் ஆண்டு ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்து மதத்தைச் சேர்ந்த மணிமேகலை, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஹூசைனை காதலித்து திருமணம் செய்ததை அடுத்து அப்போது பலரும் வாழ்த்தினர்.

manimegalai hussain mass reply on wedding anniversary video

அதேநேரம் மணிமேகலை-ஹூசைன் தம்பதியரின் காதல்  திருமணத்தை  சமூக வலைதளங்களில் மோசமாகவும் சிலர் விமர்சனங்களை தெரிவித்தனர். ஆனால் எல்லாவற்றையும் கடந்த இந்த காதல் ஜோடி, அன்பும் காதலும் கொஞ்சமும் குறையாமல்  மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். 

இந்நிலையில்  மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமது நான்காம் ஆண்டு திருமண நாள் குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டார்.

மேலும், அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் ஹூசைனை திருமணம் செய்த வீடியோவையும், அப்போது சமூக வலைதளங்களில் தான் எதிர்கொண்ட மோசமான விமர்சனங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

இந்த விமர்சனங்கள் அனைத்தையும்  தாண்டி தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களும் இந்த வீடியோவில் பெற்றுள்ளன.

மணிமேகலையின் இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் இந்த தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துக்கள் மணிமேகலை & ஹூசைன்!

தொடர்புடைய இணைப்புகள்

Manimegalai hussain mass reply on wedding anniversary video

People looking for online information on குக் வித் கோமாளி, மணிமேகலை ஹூசைன், விஜய் டிவி, Cook With Comali 2, CookWithComali2, Manimegalai and hussain, Manimegalai hussain instagram, Manimegalai hussain trending, Manimegalai hussain wedding, Vijay Television, Vijay tv, VijayTelevision, Wedding Anniversary Video will find this news story useful.