அடடா.. CWC மணிமேகலைக்கு பின்னால் இவ்ளோ கஷ்டம் இருந்திருக்கா? ரசிகர்கள் உருக்கம்..!! EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நிகழ்ச்சியில் VJ ஆக தோன்றி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் மணிமேகலை.

Advertising
>
Advertising

இதன் பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் கோமாளியாக தோன்றிய மணிமேகலை, பல பேரின் ஃபேவரைட் கோமாளி என்றும் அறியப்பட்டார்.

வெறுமென சிரிக்க மட்டுமே செய்யாமல், நடுவர்களுக்கு இடையே பில்டு அப்பாக பேசி அனைத்துக்கும் பல்பு வாங்குவது தான் மணிமேகலையின் சிறப்பம்சம்.

இது தவிர, மணிமேகலை அடிக்கடி பகிரும் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ கூட மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடன இயக்குனரான ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மணிமேகலை.

இந்நிலையில், தற்போது ஹுசைன் மற்றும் மணிமேகலை ஆகிய இருவரும் ஜோடியாக Behindwoods TV சேனலில் கலந்து கொண்ட Fans Festival பிரத்யேக நிகழ்ச்சி, தற்போது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

தொடர்ந்து, தங்களின் வாழ்க்கையில் சமீபத்தில் மாறி மாறி இருவரும் சண்டை போட்டது தொடர்பான பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். பணியாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை போட்டு கொண்டதாக கூறிய போது, பேசிக் கொண்டே மணிமேகலை எழுந்து சென்ற விஷயங்கள், ரசிகர்கள் மத்தியில் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது.

தொடர்ந்து, தங்களின் திருமண வாழ்க்கை பற்றி பேசிய மணிமேகலை, "பொதுவாக எந்த விஷயமாக இருந்தாலும் எங்கள் இருவருக்கும் நியாயமாக இருக்கிறதா என்பதை மட்டும் தான் பார்ப்போம். மற்றவர்களை பற்றி சிந்திப்பது கிடையாது. ஹுசைன் மணிமேகலை ஜோடி மாதத்திற்கு 7 கோடி முதல் 35 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக ஒரு மீம் பார்த்தேன். ஆனால் திருமணமான முதல் இரண்டரை ஆண்டுகள் அவ்வளவு கஷ்டப்பட்டோம்.

BMW கார் வாங்கிய போது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் 2 மாதம் Due காட்டாமல் காரை எடுத்து போவதாக கூறினார்கள். அதெல்லாம் யாருக்குமே தெரியாது. இன்று நாங்கள் சம்பாதிப்பதை பற்றி குறிப்பிடுகிறார்கள். ஆரம்பத்தில் நாங்கள் சம்பாதிக்கமால் இருந்த போது, எங்களுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை. மேலும், தொடக்கத்தில் எங்களை சுற்றி நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் தான் வந்தது" என்றார்.

தொடர்ந்து, தனக்கு சமூக வலைத்தளம் வந்த பாசிட்டிவ் கமெண்ட்டுகள் குறித்தும் நிறைய தகவல்களை மணிமேகலை தெரிவித்தார். அதே போல, ஹுசைன் மற்றும் மணிமேகலை என இருவரும் தங்களின் காதல் திருமண வாழ்க்கை குறித்து பல மனம் உருகும் தகவல்களை வெளியிட்டு அங்கிருந்த ரசிகர்கள் உள்ளிட்டோரையும் நெகிழ வைத்தனர்.

இது தொடர்பான முழு வீடியோவைக் காண :

அடடா.. CWC மணிமேகலைக்கு பின்னால் இவ்ளோ கஷ்டம் இருந்திருக்கா? ரசிகர்கள் உருக்கம்..!! EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Manimegalai and hussain fans festival get emotional exclusive

People looking for online information on Cook with comali, CWC, Hussain, Manimegalai will find this news story useful.