மணிகண்டாவின் சர்ப்ரைஸை முன்கூட்டியே கண்டுபிடிச்ச ADK.. இன்றைய பிக்பாசில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | தனலட்சுமி வெளியேறியதுனால வருத்தப்பட்ட பிரபல நடிகை.. உள்ள வந்த உடன் தனா சொல்லிய விஷயம்..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இதனிடையே, Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசிமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார்.

இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் மணிகண்டா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். பிக்பாஸ் போலவே மணிகண்டா பேச அதனை மைனாவும், ADKவும் கண்டுபிடித்துவிடுகின்றனர். பிக்பாஸ் போலவே பேசும் மணிகண்டா மைனா மற்றும் மற்ற போட்டியாளர்களை ஸ்டோர் ரூமில் உள்ள பூ தட்டுகளை எடுத்துக்கொண்டு கேட் அருகே வருமாறு கூறுகிறார் மணிகண்டா.

அப்போது, கேட் திறக்கப்பட மணிகண்டா உள்ளே வருகிறார். அவருக்கு மைனா உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்பு அளிக்க பின்னர் ADK அவரை கட்டியணைத்து வரவேற்கிறார். முன்னதாக அசல், ராபர்ட், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி மற்றும் தனலட்சுமி ஆகியோர் வீட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் தற்போது மணிகண்டாவும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருப்பதால் வீடு களைகட்டியுள்ளது.

Also Read | "நீ வெளியே போனப்போ அந்த ஒரு விஷயம் Guilt-ஆ இருந்துச்சு".. அசலிடம் Feel பண்ணி பேசிய விக்ரமன்..!

தொடர்புடைய இணைப்புகள்

Manikanta Rajesh Surprise re entry to BiggBoss House

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Manikanta Rajesh, Manikanta Rajesh Surprise re entry to BB House will find this news story useful.