ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read | குடும்பத்தோடு கேக் வெட்டி கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை பூர்ணா 😍.. வைரல் போட்டோஸ்
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் நடைபெறும் போது ஏராளமான சண்டைகள் உள்ளிட்ட விஷயங்கள் தான் அதிகம் அரங்கேறும். ஆனால் கடந்த வாரம் பிக் பாஸ் வீடு எமோஷனல் நிறைந்த ஒன்றாக மாறி இருந்தது. இதற்கு காரணம், Freeze டாஸ்க்கில் அனைத்து போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்திருந்தது தான். அதற்கு முந்தைய வாரம் தான் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி கண் கலங்கி போயிருந்தனர் போட்டியாளர்கள்.
அப்படி ஒரு சூழலில், அடுத்த வாரமே அனைவரையும் பிக் பாஸ் டாஸ்க்கில் காணவும் நேர்ந்ததால் மிகுந்த உற்சாகத்திலும் போட்டியாளர்கள் திளைத்து போயினர். அப்படி வந்த குடும்பத்தினர், அங்குள்ள பேவரைட் போட்டியாளர்கள் பற்றியும், அவர்கள் விளையாடுவது குறித்தும் நிறைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதனால் கடந்த வாரம் பிக்பாஸ் வீடு கலகலப்புடனும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் நிறைந்திருந்தது.
இதனிடையே, வார இறுதியில் தோன்றிய கமல்ஹாசன், போட்டியாளர்களுடன் நிறைய விஷயங்களை உரையாடி இருந்தார். இதனைத் தொடர்ந்து, மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். அசிம், மைனா நந்தினி உள்ளிட்ட போட்டியாளர்கள் கண் கலங்கியும் போன நிலையில், அவரை வாழ்த்தியும் அனுப்பி இருந்தனர்.
தற்போது 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் அடுத்த சுற்றுக்கான விளையாட்டையும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது விக்ரமனிடம் மணிகண்டா பேசிய விஷயம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
தான் எலிமினேட் ஆனதாக அறிவிக்கப்பட்டதும் விக்ரமனை கட்டியணைத்து பேசிய மணிகண்டா, "ப்ரோ. எதையும் மனசுல வெச்சுக்காதீங்க. உங்கள வேதனைப்படுத்தி இருந்தா என்ன மன்னிச்சுக்கோங்க. லவ் யூ ப்ரோ. கண்டிப்பா நான் இந்த மாதிரி கிடையாது. நீங்க வெளில வாங்க. நம்ம நட்ப தொடங்கலாம். இங்க நம்ம நட்ப தொடங்க முடியல" என கூறினார்.
இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்தும் வெளியேறும் கடைசி தருணத்தில், "விக்ரமன் Finale வாங்க" என்றும் மணிகண்டா கூறிவிட்டு வெளியேறினார். அதே போல, கமல்ஹாசன் அருகே சென்ற பிறகு விக்ரமனிடம பேசிய மணிகண்டா, "நண்பா. வெளியா வாங்க கேம் முடிச்சிட்டு. நான் உங்ககிட்ட தான் இந்த வீட்ல சரியா பழகல. அந்த குறைய வெளிய தீர்க்குறேன். சந்தோசமா பழகலாம் நண்பா" என குறிப்பிடுகிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் மணிகண்டா மற்றும் விக்ரமன் ஆகியோருக்கு இடையே அதிகம் நட்பு இல்லாத சூழலில் அதை பற்றி மணிகண்டா நினைவுகூர்ந்த விஷயம், பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
Also Read | "வீரமே ஜெயம்".. சிவகார்த்திகேயனின் மிரட்டலான லுக்கில் வைரலாகும் 'மாவீரன்' பட போஸ்டர்!