மணிகண்டா BLUETOOTH ஷூவை பயன்படுத்தினாரா?.. சந்தேகத்தில் பரிசோதித்த பிக் பாஸ்.? மைனா சொன்னது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்புமுனைகளுடன் தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், ஏகப்பட்ட சண்டைகள் மற்றும் அதே வேளையில் கலகலப்பான விஷயங்கள் கூட அவ்வப்போதும் அரங்கேறி வருகிறது.

இதற்கு மத்தியில், டாஸ்க் என வந்து விட்டால் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் மாறி மாறி களேபரங்கள் தான் நடைபெறும்.

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க் உள்ளிட்ட இரண்டு டாஸ்க்குகள் காரணமாக கடந்த சில எபிசோடுகளில் பல போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வெடித்திருந்தது. இதன் காரணமாக உருவான பல பிரச்சனைகளுக்கு வார இறுதியில் வந்த கமல்ஹாசன் விடை அளித்திருந்தார். இதற்கு மத்தியில், ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார்.

இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர். இதன் பின்னர், கடைசியாக சமீபத்தில் மகேஸ்வரியும் எலிமினேட் செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து, தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் மீண்டும் தங்களின் ஸ்டைலில் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

இதற்கிடையில், புதிய டாஸ்க்கின் காரணமாக இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த டாஸ்க் பெயரிலும் பல்வேறு விஷயங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில், மணிகண்டா ராஜேஷ் ஷூவில் Blue Tooth இருப்பதாக வெளியான தகவல், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில விதிமுறைகள் உள்ளது. அதில், செல்போன், எலக்ட்ரானிக் கேட்ஜட்கள் உள்ளிட்ட பொருட்களை போட்டியாளர்கள் உள்ளே எடுத்து செல்ல கூடாது என்பது தான் அது. ஆனால், அப்படி ஒரு சூழலில் 6 வது சீசன் ஆரம்பித்து ஒரு மாதமான நிலையில், மணிகண்டா ராஜேஷ் பயன்படுத்திய ஷூவில் ப்ளூடூத் இருப்பதாக குழப்பம் உருவாகி இருந்தது.

தனது ஷூவில் ப்ளூடூத் இருப்பதாக மைனாவிடம் மணிகண்டா கூற, இதன் பின்னர் அவரது ஷூவை பிக்பஸ் சார்பில் பரிசோதிக்க கொண்டு சென்றதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக நிவாஷினியிடம் மைனா நந்தினியும் பேசுகிறார். மணிகண்டா தனது ஷூவில் ப்ளூடூத் இருப்பதாக கூறியதை நினைவு கூர்ந்த மைனா, அது உண்மையில் உள்ளதா என்பதை பரிசோதிக்க ஷூவை கொண்டு சென்றிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

இதனால், பிக்பாஸ் பார்வையளார்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தது. மணிகண்டா, ப்ளூடூத் பயன்படுத்தி இருந்தால் விதிமுறைகளை மீறியதாக கணக்கில் வரும். ஆனால் மீண்டும் பிக்பாஸ் சார்பில் அவரது ஷூ குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்ப கொடுத்துள்ளனர். இதனால், மணிகண்டா ப்ளூடூத் பயன்படுத்தவில்லை என்பது ஏறக்குறைய உறுதியானதாகவும் ரசிகர்கள் மத்தியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்‌.

மணிகண்டா BLUETOOTH ஷூவை பயன்படுத்தினாரா?.. சந்தேகத்தில் பரிசோதித்த பிக் பாஸ்.? மைனா சொன்னது என்ன? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Manikanta rajesh shoe issue as bluetooth in biggboss house

People looking for online information on BB6 Tamil, BIGGBOSS TAMIL, Manikanta Rajesh, Myna Nandhini will find this news story useful.