"எது அமுதவாணன் முரடனா?".. மணிகண்டாவின் தாய் கொடுத்த பெயர்.. அசிம், விக்ரமன் பத்தி சொன்னதும் ULTIMATE!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

Advertising
>
Advertising

இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்கள், அசிமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்து மணிகண்டாவின் தாயார் பேசிய விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.

போட்டியாளர்கள் குறித்து பேசும் மணிகண்டாவின் தாயார், "விக்ரமனை ரொம்ப புடிக்கும். பேச்சு நல்லா இருக்கும். அது நியாயமா இருக்கு. சில இடத்துல கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும். அவ்ளோ தான். வேற ஒண்ணுமில்ல. அதே போல அசிம் நல்லா உண்மைய பேசுறீங்க. ரச்சிதா ரொம்ப ஸ்வீட். அவங்க இன்னும் நல்லா விளையாடணும்" என ரச்சிதாவிடம் அறிவுறுத்துகிறார்.

இதன் பின்னர், அமுதவாணன் பற்றி பேசும் மணிகண்டாவின் தாயார், "முரடன். முரட்டுத் தனமாக இருப்பவர்" என்றும் தெரிவிக்கிறார். இதனைக் கேட்டதும் அமுது உட்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். இதே போல, ஏடிகே சாமியார் வேஷம் போட்டதையும் கதிரவன் சைக்கிள் ஜாக்ஸன் வேஷம் போட்டு நடனமாடி இருந்ததையும் பாராட்டிய அவர், ஷிவின் நல்ல பொண்ணு என்றும் கூறி இருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Manikanta rajesh mother opinion about bigg boss housemates

People looking for online information on Amudhavanan, Azeem, Manikanta, Vikraman will find this news story useful.