பிக் பாஸ் வீட்டில் தனியாக நின்ற அசிம்.. வீடியோவை பகிர்ந்து மணிகண்டா போட்ட கமெண்ட்!!.. வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது. இந்த நிலையில், வார இறுதியில் தோன்றி இருந்த கமல் ஹாசன், Finaleவில் வெற்றி பெற தகுதி இல்லாத ஒருவரின் பெயரை குறிப்பிடும் படி அனைத்து போட்டியாளர்களிடமும் கேட்டுக் கொண்டார்.

அப்போது ஷிவின், ரச்சிதா, விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் அசிம் பெயரை தெரிவித்திருந்தனர். மேலும் அசிமை அவர்கள் அப்படி தேர்வு செய்ததற்காக நிறைய காரணங்களையும் கூறி இருந்தனர். அனைத்து போட்டியாளர்களிடமும் அசிம் சண்டை போடுவதாகவும், மேலும் ஸாரி கூறியும், காஃபி, டீ போட்டுக் கொடுத்து அவர்களுடன் மீண்டும் நல்ல முறையில் பழகினாலும் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் சண்டை போடுவார் என்றும் காரணம் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு கூட, அசிம் குணங்கள் குறித்து கமல்ஹாசன் முன்னிலையில் போட்டியாளர்கள் இன்னும் நிறைய கருத்துக்களையும் முன் வைத்திருந்தனர். அப்படி ஒரு சூழலில், தன்னை பற்றி அனைத்து போட்டியாளர்களும் நிறைய விஷயங்களை முன் வைப்பது பற்றி சிந்தித்து கொண்டு பிக் பாஸ் வீட்டின் வெளியே சென்று தனியாக நின்ற படி பார்த்து கொண்டிருந்தார் அசிம். தனிமையில் அவர் நிற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.

அதே போல, இது தொடர்பான வீடியோக்களையும் அசத்தலாக எடிட் செய்தும் அசிம் ரசிகர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், அப்படி ஒரு வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் முந்தைய போட்டியாளர் மணிகண்டா ராஜேஷ். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அசிமின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.


இதனைத் தொடர்ந்து, தற்போது அசிம் தனியாக நிற்பதை குறிப்பிட்டு இருக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த மணிகண்டா, "அசிம் இன்னும் ஸ்ட்ராங் ஆகிறார்" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Manikanta rajesh insta story about azeem alone in bigg boss house

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Manikanta Rajesh will find this news story useful.