"ஒன்னும் கிழிக்க முடியல.. அதுனால அனுப்பிட்டாங்க".. மணிகண்டா VS மகேஷ்வரி.. BIGGBOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "வாரிசு FDFS-ல் ஏன் அழுதீங்க?".. "பட ரிலீஸ்க்கு முன் 20 நாள் தூங்கல".. இசையமைப்பாளர் தமன் EXCLUSIVE!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.

அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்நிலையில், வீட்டுக்குள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், விக்ரமன் தான் மணிகண்டாவிடம் முட்டை கேட்டதாகவும் அவர் இல்லை என்று சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது, "நான் இல்லைன்னு சொன்னேனா?" என கேட்கும் மணி, விக்ரமன் அருகே அமர்ந்திருந்த மகேஷ்வரியிடம்," நீங்க ஏன் தலையை ஆட்டுறீங்க. எனக்கு கோபம் வந்துடும். விக்ரமன் கிட்ட பேசும்போது நீங்க ஏன் குறுக்க வரீங்க" என்கிறார்.

அதனை கேட்ட மகேஷ்வரி,"இவங்க என்ன வேணும்னாலும் பேசலாம். நாம பேசக்கூடாதா?" என கேட்க, மணிகண்டா,"வீட்டுல இருந்து ஒன்னும் கிழிக்க முடியல, அதுனால வெளில அனுப்பிட்டாங்க" என கூறியபடி அங்கிருந்து வேகமாக நடந்து செல்கிறார். அப்போது அவர் "பதனி, பதனி" என கூறியபடி செல்ல, சாப்பிட்டுக்கொண்டிருந்த GP முத்து மற்றும் மைனா இதனை கேட்டு சிரிக்கின்றனர்.

Also Read | ஜிகர்தண்டா டபுள் X பட ஷூட்டிங்.. நடிகர் லாரன்ஸ் பற்றி SJ சூர்யா வைரல் பதிவு! தெறி அப்டேட்ஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Manikanta Rajesh argument with maheshwari in BB House

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Maheshwari, Manikanta, Manikanta Rajesh, Vijay tv will find this news story useful.