VIDEO: கமல்ஹாசன் குரலில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் அட்டகாசமான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஷங்கர், ரஜினிகாந்த் & கமல்ஹாசன் வருகை தந்தனர். மேலும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த படத்தின் தமிழ் டிரெய்லர் கமல்ஹாசனின் பின்னணி குரலுடன் அமைந்துள்ளது. அதே போல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் முறையே அணில் கபூர், ராணா, எழுத்தாளர் ஜெயந்த் கைகினி, பிரித்வி ராஜ் ஆகியோர் குரலில் அமைந்துள்ளது.

1000 வருடங்களுக்கு முன்பு என கமல்ஹாசன் குரலில் ஆரம்பிக்கும் டிரெய்லர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. போர் காட்சிகள், காதல் காட்சிகள் மற்றும் துரத்தல் காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளன. டீஸரில் இடம் பெற்ற காட்சிகளின் நீட்சியாக டிரெய்லர் அமைந்துள்ளது.

VIDEO: கமல்ஹாசன் குரலில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் அட்டகாசமான டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mani Ratnam Ponniyin Selvan PS1 Movie Trailer Released

People looking for online information on Aishwarya rai, Jayam Ravi, Karthi, Ponniyin Selvan, Ponniyin Selvan Trailer, PS1 Trailer, Vikram will find this news story useful.