பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
Also Read | நடிகை திவ்யபாரதி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. பிரபல போட்டோஃகிராபர் எடுத்த வைரல் ஃபோட்டோஸ்!
புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று (08.07.2022) சென்னையின் Trade Center-ல் நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும், தமிழில் நடிகர் சூர்யாவும் வெளியிட்டனர்.
டீசரில் ஆதித்த கரிகாலன் (விக்ரம்) வீரபாண்டியன் மீது நடத்திய போரும், முன்னாள் காதலியான நந்தினி (ஐஸ்வர்யா ராய்) மீதான காதலும் பிரதான பங்கு வகிக்கிறது. மேலும் குந்தவை நாச்சியார் (த்ரிஷா) & நந்தினி (ஐஸ்வர்யா ராய்) சந்திக்கும் புகழ் பெற்ற காட்சியும் டீஸரில் இடம்பெற்றுள்ளது. வந்தியத்தேவன் (கார்த்தி) & அருள்மொழி வர்மன் (ரவி) சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. டீஸர் முழுவதும் ரஹ்மானின் இசை பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. போர் காட்சிகள், குதிரைப்படை & யானையை மதம் பிடிக்க வைக்கும் காட்சியும் டீஸரில் இடம்பெற்றுள்ளது.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
A R ரஹ்மான் இசையில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் அனைத்து மொழி (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்) ஆடியோ இசை உரிமைகளையும் மும்பையை தலைமையிடமாக கொண்ட டிப்ஸ் (TIPS) நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தாரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
Also Read | பழைய டிரெண்டை மீண்டும் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனா.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!