‘அண்ணாத்த’ செண்டிமெண்ட்.. "எனக்கும் தங்கச்சி இருக்குது".. கண்ணீர் விட்ட சகோதரர்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி வெளியீடாக நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’.

Advertising
>
Advertising

இப்படத்தில் காளையனாக வரும் ரஜினிகாந்த் தனது தங்கை தங்க மீனாட்சியாக வரும் கீர்த்தி சுரேஷ் மீது காட்டும் பாசமும், அதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் திருமண வாழ்க்கைக்கு பிறகு வரும் சிக்கலை ரஜினி எதிர்கொள்ளும் ஆக்‌ஷனும் தான் மையக்கதை.  

படத்தில் ரஜினி தன் தங்கைக்காக செய்யும் தியாகங்கள், எடுக்கும் ரிஸ்க், எதிர்கொள்ளும் போராட்டம் என அனைத்தும் எமோஷனலாக வந்திருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். சில ரசிகர்கள் படத்தை பார்த்து தங்களுடைய தங்கை நினைவு வந்து எமோஷனல் ஆகி அழவும் செய்துள்ளனர்.

இந்நிலையில் முதல் நாள் அண்ணாத்த படம் பார்த்த ரசிகர் ஒருவர், “படம் செம செண்டிமெண்ட். தலைவர் சரியான நடிப்பு.. பயங்கரமா நடிச்சிருக்கார். தங்கச்சி செண்டிமெண்டை தலைவர் மாதிரி நடிக்க முடியாது. யாராலயும் நடிக்க முடியாது. தலைவருக்குதான் இந்த படம் பொருத்தம். தங்கச்சி பாசம்னா இதுதான் பாசம்.

என் தங்கசி மேலலாம் இவ்ளோ பாசமா நான் இருப்பேனானு தெரில.. க்ளைமாக்ஸ்ல எல்லாரும் அழுவுறாங்க. எனக்கு தங்கச்சி இருக்குது.. அதான் ஓவரா எமோஷனல் ஆயிட்டேன். ஃபைட்.. பாசம்.. செண்டிமெண்ட்.. எல்லாமே இருக்கு. இது தலைவர் தீபாவளி. தலைவர் ரசிகர்களுக்கு சொல்லல.. எல்லாரும் வந்து பாருங்க!” என அழுதுகொண்டே பேசியுள்ளார். இணைப்பில் வீடியோ உள்ளது.

‘அண்ணாத்த’ செண்டிமெண்ட்.. "எனக்கும் தங்கச்சி இருக்குது".. கண்ணீர் விட்ட சகோதரர்.. வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Man who have sister cries after watching rajini Annaatthe video

People looking for online information on Annaatthe, Keerthi Suresh, Nayanthara will find this news story useful.