மைக் டைசன் கிட்ட இப்படி பண்ணலாமா மை சன்.. 'சண்டைக்கு வா' என அழைத்த நபர்.. டைசன் செஞ்ச காரியம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசனை சண்டைக்கு வரும்படி அழைத்த நபர், திடீரென துப்பாக்கியை எடுத்து நீட்டியதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
>
Advertising

நீக்கப்பட்ட காட்சிகளுடன் 4K & Dolby தரத்தில் பிரபல OTT-யில் வெளியாகும் வலிமை..! எப்போ...எத்தனை மணிக்கு?

மைக் டைசன்

அமெரிக்காவை சேர்ந்த மைக் டைசன் உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் ஆவார். ஹெவிவெய்ட் போட்டிகளில் எதிராளிகளை நாக்-அவுட் செய்து வெற்றிபெறுவதே இவரது ஸ்பெஷலாகும். இதற்காகவே இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரையில், மொத்தம் 58 போட்டிகளில் பங்கேற்று 50-இல் வெற்றி பெற்ற மைக் டைசன், 44 போட்டிகளில் நாக் அவுட் முறையில் எதிராளிகளை வீழ்த்தியிருக்கிறார்.

நிகழ்ச்சி

இந்நிலையில், நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபல ஹாலிவுட் படப்பிடிப்பு தளத்தில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மைக் டைசனும் கலந்துகொண்டார். அப்போது, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நபர் ஒருவர் மைக் டைசனை சண்டைக்கு வரும்படி அழைத்தார்.

இதனை அடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அகற்ற முயற்சித்தனர். ஆனால், அவர் விடாமல் கூச்சலிட்டிருக்கிறார்.

துப்பாக்கி

தொடர்ந்து மைக் டைசனை சண்டைக்கு அழைத்த நபரை வெளியேற்ற பணியாளர்கள் முயற்சிக்க, அப்போது அந்த நபர் தனது சட்டையில் இருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டியிருக்கிறார். இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், மைக் டைசன் கூலாக சேரில் அமர்ந்திருந்தார்.

இருப்பினும் அவரை சமாதானப்படுத்த அங்கிருந்த அதிகாரிகள் முயற்சித்தனர். இதன் பலனாக தனது தவறை உணர்ந்த அந்த நபர் துப்பாக்கியை உள்ளே வைத்ததுடன் மைக் டைசனிடம் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அவரை ஆரத்தழுவினார் மைக் டைசன்.

இதை தொடர்ந்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அந்த நபரை அங்கிருந்து வெளியே கொண்டு சென்றனர். அவர் காவல்துறையினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் மைக் டைசன் கேட்டுக் கொண்டிருக்கிறார். எனினும், காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RRR படத்துக்கு ஒரு டிக்கெட் 1500 ரூபாயா? இந்தியா முழுவதும் வெளியான OFFICIAL தியேட்டர் கட்டண விவரம்!

Man challenge against to Mike Tyson for a Fight

People looking for online information on Fighter, Iron Mike, Kid Dynamite, Michael Gerard Tyson, Mike Tyson, Professional boxer, Tyson will find this news story useful.