நடிகை மம்தா மோகன்தாஸ் மாலத்தீவில் இருந்து Throwback புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Also Read | சூர்யாவை பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இது தான் காரணம்! செம்ம
2006-ல் விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மம்தா மோகன்தாஸ், தொடர்ந்து குசேலன், 'குரு என் ஆளு', 'தடையற தாக்க' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு மலையாள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
2005-ல் மயூகம் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமா உலகில் நடிகையானார் மம்தா மோகன்தாஸ். அதேபோல் 2007-ல் யமதொங்கா என்ற தெலுங்குப் படம் மூலம் தெலுங்கு சின்னிமாவில் அறிமுகமானார்.
கடைசியாக தமிழில் விஷால் -ஆரியா நடித்த எனிமி படத்தில் நடித்திருந்தார் மம்தா மோகன்தாஸ். 2010ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்தா, அதன் பிறகு சரியான மருத்துவ ஆலோசனைப்படி வைத்தியம் எடுத்து குணமானார். தற்போது புற்றுநோயில் இருந்து முழுவதும் விடுபட்டு தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகின்றார்.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப், பிருத்வி ராஜ், ஜெயராம், சுரேஷ் கோபி ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக பிருத்விராஜூடன் ஜனகனமன படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் ஊமை விழிகள், மலையாளத்தில் அன்லாக் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றது. சமீபத்தில் மம்தா மோகன் தாஸ் மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்றார். அங்கு மாலத்தீவில் உள்ள மாலி தீவில் மம்தா தங்கியிருந்து அங்குள்ள கடற்கரை ரிசார்ட்டில் பிகினி உடையில் புகைப்படங்களை பகிர்ந்து வைரலானார்.
இந்நிலையில் இந்தியா திரும்பிய பிறகு அங்கு மாலத்தீவில் இருந்து சில புகைப்படங்களை மீண்டும், "மாலத்தீவை மிஸ் செய்கிறேன்' என தலைப்பிட்டு புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிந்துள்ளார்.
Also Read | நடிகை மீனாவின் கணவர் மரணம் இதனால் தான்.. டிவிட்டரில் குஷ்பு அளித்த தகவல்