1988 முதல் 2022…. 32 ஆண்டுகளாக கலக்கும் CBI சேதுராமய்யர்… மம்மூட்டி பட டிரைலர் ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மம்மூட்டியின் ட்ரேட் மார்க் கதாபாத்திரங்களில் ஒன்றான CBI படத்தின் ஐந்தாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது.

Advertising
>
Advertising

CBI சேதுராமய்யரின் 32 ஆண்டுகால சாகசம்…

மம்மூட்டியின் சினிமா கேரியரில் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்த கதாபாத்திரங்களுள் ஒன்றூ சிபிஐ சேதுராமய்யர். 1988ஆம் ஆண்டு முதல் முதலாக மம்மூட்டி நடிப்பில் வெளியான ஒரு சிபிஐயின் டைரிக்குறிப்பு. S. N. Swamy எழுத்தில் K. Madhu இயக்கத்தில் வெளியானது. இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இந்த வெற்றி கூட்டணி ஜாக்ரதா, சேதுராமய்யர் CBI, நேரரியன் CBI, என நான்கு முறை இணைந்துள்ளது.  CBI சேதுராமய்யர் (மம்மூட்டி) குற்றங்களை ஆராய்ந்து தீர்ப்பதே இத்திரைப்படத்தின் மூலக்கரு ஆகும். இந்த நான்கு திரைப்படத்திற்கும் Shyam இசையமைத்திருந்தார்.

ஐந்தாவது முறை கூட்டணி…

தற்போது இந்த கூட்டணி ஐந்தாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. S. N. Swamy எழுத்தில் K. Madhu இயக்குகிறார். சென்ற நான்கு படங்களுக்கு Shyam இசையமைத்திருந்த நிலையில் தற்போது ஐந்தாம் பாகத்திற்கு Jakes Bejoy இசையமைக்கிறார். மற்ற படங்களில் உள்ள மிகவும் பிரபலமான சிபிஐ தீம் மியூசிக் இதிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

முன்னணிக் கலைஞர்கள்…

இப்படத்தில் ரஞ்சி பணிக்கர், அனூப் மேனன், சாய்குமார், சௌபின் ஷாஹிர், திலீஷ் போத்தன், பிரசாந்த் அலெக்சாண்டர், ரமேஷ் பிஷாரடி, ஜெயகிருஷ்ணன், சுதேவ் நாயர், அஜீஸ் நெடுமங்காட், சந்தோஷ் கீழாத்தூர், எடவேல பாபு, கோட்டயம் ரமேஷ், முகேஷ், சுரேஷ் குமார், தந்தூர் கிருஷ்ணன், ராஜன், அன்சிபா ஹாசன், மாளவிகா மேனன், மாளவிகா நாயர், ஸ்வாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்வர்கசித்ரா தயாரிப்பு நிறுவனத்தின் அப்பச்சன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கையாள்கிறார். இந்த படம் வரும் மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

எதிர்பார்ப்பை எகிறவைத்த டிரைலர்….

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. வழக்கம்போல ஒரு கொலை நடந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறும்போது சிபிஐ அலுவலராக வந்து மம்மூட்டி அதை தன்னுடைய தனித்துவமான சாதூர்யத்தால் தீர்த்து வைக்கும் விதமாக படம் இருக்கலாம் என்பதை  டிரைலர் தெரியப்படுத்துகிறது. ரிலீஸுக்கு சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த டிரைலர் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

1988 முதல் 2022…. 32 ஆண்டுகளாக கலக்கும் CBI சேதுராமய்யர்… மம்மூட்டி பட டிரைலர் ரிலீஸ்! வீடியோ

Tags : Mammooty, CBI

Mamooty CBI 5 the brain movie trailer released

People looking for online information on CBI, Mammooty will find this news story useful.