மம்மூட்டி நடிக்கும் 'நண்பகல் நேரத்து மயக்கம்'.. ரிலீஸ் எப்போ? கலர்ஃபுல்லான போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மம்மூட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | துணிவு படத்தில் 'No Guts No Glory' வாசகம் ஏன்?.. H. வினோத் கொடுத்த செம விளக்கம்!

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.

லிஜோ ஜோஸ் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். மம்மூட்டியுடன் ரம்யா பாண்டியன், பூ ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டவர். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

கேரள அரசின் திரைப்பட விழாவில் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்ற இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் வரும் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக வண்ணமயமான பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்கு பிறகு லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி தனது அடுத்த படத்தை மோகன்லால் நடிப்பில் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. 

இந்த படத்திற்கு "மலைக்கோட்டை வாலிபன்" என தமிழில் பெயரிடப்பட்டுள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | 40 வருட ரசிகர் சுதாகர் மரணம்.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! உருக்கமான வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mammootty Nanbagal Nerathu Mayakkam Movie Release Date Announced

People looking for online information on Mammootty, Nanbagal Nerathu Mayakkam, Nanbagal Nerathu Mayakkam Movie Update will find this news story useful.