மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி.
மலையாளம் மட்டுமில்லாமல், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் பீஷ்ம பர்வம், சிபிஐ 5, புழு, ரோஸாக் உள்ளிட்ட திரைப்படங்கள் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி உள்ளன. தற்போது 'கிறிஸ்டோபர்', 'காதல்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் மம்மூட்டி நடித்து வருகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளிவந்த ‘ஓம் சாந்தி ஓசானா’ படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி, இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘2018’.
இந்தப் படத்தின் விழாவில் பேசிய நடிகர் மம்முட்டி, “இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் தலையில் முடி இல்லாவிட்டாலும், அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டீசரைப் பார்த்தேன். சிறப்பாக வந்துள்ளது” என பேசியிருந்தார். இந்த பேச்சு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகர் மம்முட்டி தன்னுடைய முகநூல் பக்கத்தில் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “அன்பர்களே.. '2018' பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் 'ஜூட் ஆண்டனி'யை பாராட்டி பேசிய உற்சாக வார்த்தைகளால் சிலர் மனம் புண்பட்டதற்கு வருந்துகிறேன். இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் உறுதியளிக்கிறேன். அனைத்து நினைவூட்டல்களுக்கும் நன்றி.” என மம்மூட்டி பதிவிட்டுள்ளார்