அசுரன் - சூரரைப் போற்று உடன் கலக்க போகும் தமிழ் திரைப்படம்.. ரிலீஸுக்கு முன் இத்தனை சாதனைகளா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசுரன், சூரரைப் போற்று திரைப்படங்களுடன் பரமபதம் என்கிற திரைப்படமும் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள தமிழர்களான விக்னேஷ் பிரபு மற்றும் தனேஷ் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பரமபதம். கேம் போர்டை மையமாக வைத்து, ஃபேன்டஸி ஜானரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. பல்வேறு உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு இத்திரைப்படம் 18 விருதுகளை பெற்றுள்ளது.

மேலும் கோல்டன் குளோப் விருதுக்கும் இத்திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அசுரன், சூரரைப் போற்று, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட திரைப்படங்களும் இந்த வரிசையில் அடங்கும்.

மேலும் பல்வேறு விருதுகளை குவித்துள்ள பரமபதம் திரைப்படம், மலேசிய சாதனை புத்தகத்திலும் ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. இத்துடன் மலேசியாவில் உருவான தமிழ் திரைப்படம் ஒன்று கோல்டன் குளோப் விருதில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்ற சிறப்பையும் பரமபதம் பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு இத்திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிட்ட படக்குழு திட்டமிட்டள்ளது. ஒருவேளை கொரோனா வைரஸ் சூழ்நிலை தொடருமானால், நேரடி ஓ.டி.டி ரிலீஸ் குறித்து பரிசோதித்து வருகிறது படக்குழு. 

மலேசிய திரைப்படம் பரமபதம் சாதனை | Malaysian tamil film paramapatham record with soorarai pottru asuran

People looking for online information on Paramapatham Malaysia, Paramapatham Movie, Vignesh Prabhu will find this news story useful.