அரிய 'அமிலோய்டோசிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பிரபல ஒளிப்பதிவாளர்.. சோகத்தில் திரையுலகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு அரிய வகை புரதத் திரட்சி தசை  நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Advertising
>
Advertising

மலையாள சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக செயல்பட்டு வந்தவர் சுதீஷ் பப்பு. கம்மட்டிபாடம், துறைமுகம் படங்களின் இயக்குனரான ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியின் உறவினரான சுதீஷ் பப்பு, ராஜீவின் படங்களிலும் பணி புரிந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக Amyloidosis என்ற புரதத் திரட்சி தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புரதத் திரட்சி தசை நோயால் சிறுநீரகம் & இருதயம் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குடல், அகச்சுரப்பிகள், கண்கள், தோல் & நரம்பு மண்டலத்தையும் இந்நோய் பாதிக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமிலாய்ட் பைப்ரில்ஸ் எனும் அசாதாரண புரதங்கள் திசுக்களில் உருவாவதால் இந்நோய் ஏற்படுகிறது.

மில்லியன் மக்களில் 3 - 13 நபர்கள் இந்த நோயின் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். நோய் பாதித்த 1000-ல் ஒருவர் இறக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு தன்னுடைய 44வது வயதில் நவ.14 அன்று உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

சுதீஷ் பப்பு, செகண்ட் ஷோ, ரோஸ் கிதாரினால், யான் ஸ்டீவ் லோபஸ், கூத்தாரா, ஐயாள் சசி, ஈடா ஆகிய படங்களில் பணிபுரிந்தவர் ஆவார்.

Malayalam Cinematographer Sudeesh Pappu passed away

People looking for online information on Amyloidosis, Sudeesh Pappu will find this news story useful.