பிரபல மலையாள நடிகர் என்.டி. பிரசாத் எடுத்த முடிவும், அதனைக் கண்டு அவரது குழந்தைகள் அதிர்ந்து போய் நின்ற சம்பவமும், கேரள திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | "இன்னும் 14 நாள் தான் இருக்கு.." மீனாவின் பழைய இன்ஸ்டா நினைவை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்
43 வயதாகும் நடிகர் என்.டி. பிரசாத், ஏராளாமான மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நிவின் பாலி நடிப்பில் வெளியாகி இருந்த 'ஆக்ஷன் ஹீரோ பிஜு' திரைப்படம், மிகப் பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது.
இந்த படத்திற்கு பிறகு, நிறைய பட வாய்ப்புகளும், பிரசாத்திற்கு வந்து சேர்ந்தது. தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன், கொச்சி அருகே அமைந்துள்ள களமச்சேரி என்னும் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
பிரபல நடிகர் எடுத்த முடிவு
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், மாலை சுமார் 7 மணியளவில், தனது வீட்டின் அருகே உள்ள மரம் ஒன்றில், என்.டி. பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை முதலில், அவரின் குழந்தைகள் தான் பார்த்து, பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அங்கு வந்த போலீசார், பிரசாத்தின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர், அவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பின்னணியில் உள்ள பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணம்
கடந்த சில மாதங்களாகவே, குடும்ப பிரச்சனை மற்றும் கடுமையான மன அழுத்தத்தால் பிரசாத் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, கடந்த சில மாதங்களாகவே பிரசாத்தின் மனைவியும் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், தான் இறப்பதற்கு சில நாட்கள் முன்பில் இருந்தே கடும் மன உளைச்சலுடன் பிரசாத் இருந்து வந்ததாக அவரை அடிக்கடி கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரபல நடிகர் என்.டி. பிரசாத் மறைவுக்கு கேரள திரையுலகினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
Also Read | பாரிஸில் உள்ள பிரபல 3D அனிமேஷன் ஸ்டுடியோவில் ராஜமௌலி… லேட்டஸ்ட் viral புகைப்படம்