லாக்டவுனால் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட பிரபல நடிகரின் திருமணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அவரவர் வாழ்க்கையில் நடக்க வேண்டிய விஷயங்கள் எந்த காலகட்டத்திலும் நடந்தே ஆகும். அது கொரோனா பிரச்சனையால் ஊரே அடங்கிக் கிடந்தாலும் ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் நடந்தே தீரும். அவ்வகையில் சமீபத்தில் பிரபல மலையாள நடிகர் கோகுலனின் திருமணம் அவரது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது,

Advertising
Advertising

நடிகர் கோகுலன் தன்யா திருமணம் நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் நடந்தது.

நாடக நடிகராக இருந்த கோகுலன் மலையாள சினிமாவில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ஆமென் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். அதன் பின் ஜெயசூர்யாவின் காமெடி படமான ‘புன்யாலன் அகர்பத்தீஸ்’ படத்தில் அவர்  ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அதன் பின் மம்மூட்டியுடன் சமீபத்தில் நடித்த உன்டா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

லாக்டவுன் காரணத்தால் நேரில் வரமுடியாதவர்கள் திருமண வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Malayalam actor Gokulan gets married with Dhanya amidst lockdown

People looking for online information on Corona Virus, Covid 19, Dhanya, Gokulan, Lockdown will find this news story useful.