உலகப்புகழ் பெற்ற கடற்கரையில் அம்மா அப்பாவுடன் மாளவிகா மோகனன்.. வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனன் தனது குடும்பத்துடன் பிரபல கடற்கரை நகரில் சுற்றுலா சென்றுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | அல்போன்ஸ் புத்திரனின் 'GOLD'.. படம் இப்படி தான் இருக்கும்..சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்!

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன்  தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். அண்மையில் தனுசுடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார்.

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து TAUBA இசை வீடியோவில் நடித்துள்ளார்.  மேலும் ஒரு மலையாள படத்திலும், பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும்'தங்கலான்'படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அதில் குடும்பத்துடன் அரபிக்கடலில் அமைந்துள்ள வர்கலாவில் இருப்பதாக குறிப்பிட்டு தனது அம்மா & அப்பாவின் புகைப்படங்களையும் கடற்கரை புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

"30 நாட்கள் தொடர் படப்பிடிப்பிற்குப் பிறகு ஒரு நாள் விடுமுறை கிடைத்ததும், 30 நாட்கள் வீட்டை விட்டு வெளியே இருந்த என் பெற்றோரையும் பார்த்தபோது 👨‍👩‍👧
நாங்கள் வர்கலாவில் உள்ள ஒரு குன்றின் ஓரத்திற்குச் சென்று, மினி பிக்னிக் செய்து, அழகான கடலையும், அழகிய சூரிய அஸ்தமனத்தையும் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம்" என மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.

Also Read | BP 190-ஆ?? மயங்கி விழுந்த அசீம்.. தூக்கிக் கொண்டு ஓடிய போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு? Bigg Boss

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan with Her family in Varkala

People looking for online information on Malavika Mohanan, Malavika Mohanan with Her family, Varkala will find this news story useful.