பச்சை வேட்டி கட்டி நடிகை மாளவிகா மோகன் செல்ஃபி.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2013 ஆம் ஆண்டில் வெளியான பட்டம் போலே எனும் மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

Advertising
>
Advertising

Also Read | பிரபல OTT-யில் மாஸ் காட்டும் சாய் பல்லவி நடித்த புதிய படம்.. வெளியான வேற லெவல் தகவல்

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இத்தாலி & மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், இத்தாலி & மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின.

மாளவிகா மோகனன், இந்தியா திரும்பியதும் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள தடோபா காட்டில் சஃபாரி செய்து, காட்டு விலங்குகளை புகைப்படங்கள் எடுத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அந்த போட்டோக்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. நடிகை மாளவிகா மோகனன் புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றவர்.

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

இந்நிலையில் மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.   அந்த புகைப்படங்களில் பச்சை நிற வேட்டி கட்டி செல்ஃபி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். காலுக்கு மிஞ்சியும் போட்டுள்ளார். தனது சகோதரர் உடன் காபி ஷாப் சென்ற புகைப்படத்தையும் மாளவிகா பகிர்ந்து உள்ளார்.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து இசை வீடியோவில் நடித்துள்ளார். TAUBA என்ற இந்த இசை வீடியோவில் மாளவிகா மோகனன் & பாட்ஷா நடனமாடி நடித்துள்ளனர். கடந்த (24.06.2022) அன்று இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | வேறலெவல் லுக்கில் ரிது வர்மா.. வித்தியாசமான காஸ்டியூமில் நடத்திய போட்டோஷூட்.. வைரல் PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Wearing Dhoti Veshti Picture goes Viral

People looking for online information on Malavika Mohanan, Malavika Mohanan Wearing Dhoti Veshti will find this news story useful.