நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களோடு கேள்வி பதில் உரையாடலில் கலந்துகொண்டார்.
Also Read | CWC அஸ்வினின் ’என்ன சொல்ல போகிறாய்’… பிரபல TV-ல் பிரிமீயர்… எப்போது?- வெளியான தகவல்!
அறிமுகமும் பிரபலமும்…
பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சார்ந்த இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகனின் மகள் ஆவார். ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மாஸ்டர், மாறன்…
ஆனால் மாளவிகா மோகனன் பரவலாக அறியப்பட்டது விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலமாகதான். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். அவர் நடித்திருந்த சாரு கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. மாஸ்டருக்குப் பிறகு அவர் தனுஷோடு நடித்துள்ள மாறன் திரைப்படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.
Social media freak…
சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் மாளவிகா முன்னணியில் இருப்பவர். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு.
சிறுவயது முட்டாள்தனம்…
இந்நிலையில் தற்போது அவர் தனது பாலோயர்ஸ்களுடன் கேள்வி பதில் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்து அவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர்க “நீங்கள் சின்ன வயதில் ஏதாவது முட்டாளதனமான எண்ணத்தைக் கொண்டிருந்தீர்களா?” எனக் கேட்டார். அவருக்கு பதிலளித்த மாளவிகா “நான் சின்ன வயதில் நினைத்துக் கொண்டிருந்த முட்டாள்தனமான விஷயம் என்னவென்றால் ‘குழந்தைகளை விட பெரியவர்களானதும் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என இப்போது நினைக்கிறேன். நான் என் பால்யத்தை மிகவும் இழப்பதாக உணர்கிறேன். மீண்டும் அந்த காலத்துக்கு செல்ல விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8