'மாஸ்டர்' மாளவிகாவின் புதுப்பட போஸ்டர் பாத்துட்டு ரசிகரின் கமெண்ட்..‌ தரமான பதிலடி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென் இந்திய சினிமாவின் சிறந்த இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் பிரபலமான மாளவிகா, அடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்திலும் இணைந்து நடித்திருந்தார். இதற்கடுத்து மாறன் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்த மாளவிகா, தங்கலான், கிறிஸ்டி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "சண்டை போட்டவங்க ஒண்ணு சேருற நாளு போல".. அசிம் - மகேஸ்வரி, ஜிபி முத்து - விக்ரமன்.. நெகிழ்ச்சி Moments!!

இதில் கிறிஸ்டி திரைப்படத்தில் மாளவிகா மோகனனுடன் இணைந்து மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி, கிறிஸ்டி படத்தை இயக்கி வருகிறார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. அதே போல, பிப்ரவரி மாதம் கிறிஸ்டி திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் போஸ்டர்களை வைத்து பார்க்கையில், ஒரு இளைஞர் தன்னை விட வயது அதிகமுள்ள பெண் மீது விருப்பம் கொள்வதாகவும் தெரிவதாக இணையவாசிகள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு காரணம், மிகவும் இளம் வயதுடைய மேத்யூ தாமஸுடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்திருப்பது தான். இது பற்றி பல விதமான கருத்துக்கள் பரவி வந்தாலும் ட்ரைலர் உள்ளிட்டவை வெளியானால் தான் படத்தின் கதை குறித்து உண்மை என்ன என்பது தெரிய வரும் என்றும் ஒரு சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கிறிஸ்டி படத்தின் போஸ்டர் அடிப்படையில், ரசிகர் ஒருவர் செய்த கமெண்ட்டும் அதற்கு ட்விட்டரில் மாளவிகா மோகனன் கொடுத்த Reply-ம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் போஸ்டர் அடிப்படையில் இணையவாசி அநாகரிகமாக கமெண்ட் செய்ய, அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Also Read | பணப்பெட்டியோட கிளம்பிய Kathir.. "அவரு எடுத்த முடிவு".. சபையில் பேசிய விக்ரமன்.. கரெக்டா இருக்குமோ?

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan reply to fan in twitter about her movie poster

People looking for online information on Malavika Mohanan will find this news story useful.